சந்திரபாபு நாயுடுவுக்கு இனி வாழ்நாள் முழுவதும் சிறைதான்... அமைச்சர் ரோஜா உறுதி!

ரோஜா - சந்திரபாபு நாயுடு
ரோஜா - சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது சிறையில் உள்ளார். இனி அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று ஆந்திரா அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக சிறையில் உள்ளார். இதுகுறித்து ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா ராஜமுந்திரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, “

சந்திரபாபு தனது ஆட்சியில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். இதற்கு சாட்சிகளும் ஆதாரங்களும் இருப்பதாக சிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவர் தற்போது சிறையில் உள்ளார். இது தவிர அவர் மீது தொடர்ந்து 3 வழக்குகள் உள்ளன.

அமைச்சர் ரோஜா
அமைச்சர் ரோஜா

முதல் வழக்கில் இருந்து அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. அவர் தவறு செய்ததால் சிறையில் இருக்கிறார்.

இதனால் மற்ற வழக்குகளிலும் அவருக்கு இதே நிலை தொடரும்.அவர் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வருமான வரித்துறையும், பொருளாதார குற்றப்பிரிவும் விசாரித்தன. அவற்றில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் சந்திரபாபு நாயுடு தற்போது சிறையில் உள்ளார். இனி அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in