சந்திரபாபு நாயுடு கைது; பட்டாசு வெடித்து, ஸ்வீட் ஊட்டி நடிகை ரோஜா கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!

சந்திரபாபு நாயுடு கைது; பட்டாசு வெடித்து, ஸ்வீட் ஊட்டி நடிகை ரோஜா கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை, பட்டாசு வெடித்து , தொண்டர்களுக்கு ஸ்வீட் ஊட்டி சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் 371 கோடி ரூபாய் கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சாலைகளில் டயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றவாளி இல்லை எனக்கூறி நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

சந்திரபாபு நாயுடுவை அழைத்து செல்லும் போலீஸார்
சந்திரபாபு நாயுடுவை அழைத்து செல்லும் போலீஸார்

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சிறை உறுதியானது. பின்னர் சிறையில் அடைப்பதற்காக விஜயவாடாவிலிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் அவரை ராஜமுந்திரிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதனால் நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும், ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா மகிழச்சியடைந்துள்ளார். இதனைக் கொண்டாடும் விதமாக நகரியில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in