முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே பொது சிவில் சட்டம்; ஓவைசி கடும் தாக்கு!

அசாதுதீன் ஓவைசி
அசாதுதீன் ஓவைசி‘ஊழலில் காங்கிரஸும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்’ - ஓவைசி கோபம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்மொழிவு குறித்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் சீன ஊடுறுவல் போன்ற பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவே இதனைப் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓவைசி, “நாடாளுமன்றத்தில் ஏதேனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டால் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கக் கோரி விரைவில் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்கவுள்ளேன். வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் சீனாவின் ஊடுறுவல் முயற்சி போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மக்களவைத் தேர்தலுக்கு முன் நாட்டில் தேவையற்ற சூழலை திணிக்கப்பதற்காக இந்த அரசியல் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது" என்று அவர் கூறினார்.

மேலும்,"ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சட்ட ஆணையம் மீண்டும் இந்த நடைமுறையை மேற்கொள்வது தற்செயல் நிகழ்வு அல்ல. பொதுத் தேர்தலுக்கு ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பு, பாஜக இந்த பிரச்சினையை எழுப்புகிறது. இதன் நோக்கம் சூழ்நிலையை சீர்குலைத்து வாக்காளர்களை துருவப்படுத்துவதுதான். அதனால் அவர்கள் வரும் 2024 தேர்தலில் அரசியல் லாபத்தை அறுவடை செய்ய பார்க்கிறார்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in