`தாய்மார்கள் வெளியில் நடமாட முடியவில்லை'- தமிழக அரசை விமர்சிக்கும் எல்.முருகன்

`தாய்மார்கள் வெளியில் நடமாட முடியவில்லை'- தமிழக அரசை விமர்சிக்கும் எல்.முருகன்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இன்று சட்டம், ஒழுங்கு மிக மிக சீரழிந்து கொண்டு இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். நகை அணிந்து கொண்டு தாய்மார்கள், சகோதரிகள் வெளியில் செல்ல முடியவில்லை. ஸ்கூட்டியில் சென்றால்கூட அவர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை.

கஞ்சா என்பது ஒரு பரந்து விரிந்து இன்றைக்கு எல்லா பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இன்று தமிழகம் இருக்கிறது. சட்ட ஒழுங்கு நிலைநிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in