`ஸ்டாலின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக இருந்து வருகிறார்'- காரணத்தை சொல்கிறார் எல்.முருகன்

`ஸ்டாலின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக இருந்து வருகிறார்'- காரணத்தை சொல்கிறார் எல்.முருகன்

"ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் ராமர் ஜோதி ஊர்வலத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``முதல்வர் ஸ்டாலின் இன்றைக்கு அவருடைய அமைச்சர்களை, அவருடைய கட்சியின் மாவட்ட செயலாளர்களை, அவர்களுடைய எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார். அவரை தூங்க விடுவதில்லை.

அவர்களால் அவருக்கு உடல் நலம் குறைவடைகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் ஒரு கட்சித் தலைவர் சொல்லக்கூடியதை கேட்க முடியாத சூழ்நிலைதான் தற்போது தமிழ்நாட்டில் நிலை வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு காட்டாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாத ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்" என்று குற்றம்சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in