மின் இழுவை ரயில் மூலம் பழனி மலைக் கோயிலுக்குச் சென்ற எல்.முருகன்!

மின் இழுவை ரயில் மூலம் பழனி மலைக் கோயிலுக்குச் சென்ற எல்.முருகன்!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பழனிக்கு வருகை தந்தார்.

அப்போது, பழனி கோயிலுக்கு வந்த அமைச்சர் மின் இழுவை ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார். திருக்கோயில் சார்பில் எல்.முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பழனி முருகனை சாமிதரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிராசாதம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மின் இழுவை ரயில் மூலம் மலையில் இருந்து கீழிறங்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜகவின் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக சென்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in