`ராகுல் காந்தியை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை'- சொல்கிறார் எல்.முருகன்

`ராகுல் காந்தியை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை'- சொல்கிறார் எல்.முருகன்

"ராகுல் காந்தியை இன்றைக்கு இந்தியாவில் யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை" என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்தார்.

திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் முதல்வர் அனைவருக்கும் சொந்தமானவர். திமுக தலைவராக அவர் எப்படி வேண்டுமானால் இருந்து கொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாததை பற்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மக்கள் இன்றைக்கு கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், மற்ற பண்டிகளைகளுக்கு வாழ்த்துகளை பரிமாறுகிறார். தேர்தலுக்கு முன்பாக வெற்றிவேல் யாத்திரை எனது தலைமையில் நடந்தது. ஆனால், ஸ்டாலின் தேர்தல் பயத்தில் வேலை ஏந்தினார். இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக, ஒப்பந்தப்படி நடந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியை இன்றைக்கு இந்தியாவில் யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. ராகுல் காந்தி நடைபயணம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. சட்டம், ஒழுங்கை பராமரிக்க வேண்டிய கடமை அந்தந்த மாநில அரசுக்கு உண்டு. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பரந்து விரிந்துள்ளது. அதனை தடுக்க முன் வரவேண்டும். மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in