இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை: சொல்கிறார் அண்ணாமலை

இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை: சொல்கிறார் அண்ணாமலை

இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அமெரிக்க பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், - இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்று மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை. இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜக எதிர்க்கும். யார் இந்து, யார் இந்து இல்லை என்று கண்டுபிடிப்பது தான் தற்போது ஃபேஷனாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. காங்கிரஸ் இந்தி மொழியை திணித்த போது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. மத்திய அரசு மூன்று மொழியைப் படிக்க வேண்டும் வேண்டும் என சொல்லி வருகிறது. இந்தி கற்பதில் தமிழகம் "சி" நிலையில் உள்ளது. முதல்வர் ஸ்டாலினை தூங்கவிடுங்க என திமுகவினருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன் என்று அண்ணாமலை கூறினார்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு எதிராக இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக முதல்வர் .ஸ்டாலின் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தார். இதையடுத்து கேரளா, தெலுங்கானா மாநிலங்களும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், திமுக இளைஞரணி சார்பில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் அக்.15-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in