பிரதமர் மோடி - மகாதேவ் சூதாட்ட செயலி
பிரதமர் மோடி - மகாதேவ் சூதாட்ட செயலி

22 சூதாட்ட செயலிகள் முடக்கம்... மத்திய அரசு நடவடிக்கையின் பின்னணியில் அரசியல்?

சூதாட்ட செயலிகள் உட்பட 22 சட்டவிரோத செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் அங்கமாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய இறுதிச்சுற்று பிரச்சாரத்தில் ’மகாதேவ்’ என்ற சூதாட்ட செயலி சூறாவளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் - பாஜக கட்சிகள் இந்த சூதாட்ட செயலியை முன்வைத்து பரஸ்பரம் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

சூதாட்ட செயலிகள்
சூதாட்ட செயலிகள்

காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கரில் இம்முறையும் அதற்கு ஆதரவான அலையே வீசி வருகிறது. எனவே மத்தியில் ஆளும் பாஜக, சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. கடந்த ஒருவார காலமாக அங்கே விரிந்திருக்கும் அமலாக்கத்துறை விசாரணைகள், முதல்வர் பூபேஷ் பாகேலை சுற்றி வளைத்திருக்கின்றன.

மகாதேவ் என்ற சூதாட்ட செயலியின் மோசடி நடவடிக்கைகளுக்கு முதல்வர் பூபேஷ் துணை போனதாக குற்றம்சாட்டினார்கள். 500 கோடி ரூபாய்க்கும் மேலான ஆதாயத் தொகையை சூதாட்ட செயலிகள் தரப்பிலிருந்து முதல்வர் பூபேஷ் பெற்றிருப்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

இந்த மோசடி தொகையை வைத்தே சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டியது. அங்கு கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ’காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஊழல் மற்றும் மோசடிகளுக்கு ’மகாதேவ்’ என்று கடவுள் பெயரையும் விட்டுவைக்கவில்லை’ என்று சாடினார்.

சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் - அமலாக்கத்துறை
சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் - அமலாக்கத்துறை

சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக கடும் பதிலடி தந்தார். ”சூதாட்ட செயலிகளுக்கும் பாஜகவினருக்கும் தொடர்பு இருக்கிறது. அதனை மறைக்கவும், தேர்தல் நெருக்கத்தில் அவதூறு கிளப்பவும் காங்கிரஸ் மீது பழியைப் போடுகிறார்கள். அமலாக்கத்துறை விசாரணையில் இத்தனை மும்முரம் காட்டும் பாஜக மத்திய அரசு, சூதாட்ட செயலிகளை தடை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தும் அதனை இத்தனை காலமாக விட்டுவைத்திருந்தது ஏன்?” என்று காரம் காட்டினார்.

நவ.4 அன்று பூபேஷ் பாகேல் இவ்வாறு சீறியதில், அதற்கு அடுத்த நாளே மகாதேவ் உள்ளிட்ட 22 சட்ட விரோத செயலிகள் மற்றும் இணையதளங்களை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in