டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியாடெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மீண்டும் சம்மன்

டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ தலைமையகத்தில் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் நடந்த ஊழல் தொடர்பாக அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள ட்வீட்டில், "சிபிஐ நாளை மீண்டும் என்னை அழைத்துள்ளது. அவர்கள் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயின் முழு அதிகாரத்தையும் எனக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் என் வீட்டில் சோதனை செய்தனர், எனது வங்கி லாக்கரை சோதனை செய்தனர், ஆனால் எனக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. நான் டெல்லி குழந்தைகளின் நல்ல கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அவர்கள் என்னைத் தடுக்க விரும்புகிறார்கள், விசாரணைக்கு நான் எப்போதும் ஒத்துழைத்து வருகிறேன், தொடர்ந்து செய்வேன்”என்று தெரிவித்துள்ளார்.

மணீஷ் சிசோடியா மற்றும் 14 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது.

மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும் டெல்லி அரசின் கொள்கை, சில வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது, இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கடுமையாக மறுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in