சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ கிடுக்கிப்பிடி: ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ கிடுக்கிப்பிடி: ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்

சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்துள்ளதாகக் கடந்த 2015-ல் சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் , சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 10-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சி.கிருஷ்ண மூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பி.லிமிடெட் ரமேஷ்,  விஜய் சடரங்கனி ஆகிய நான்கு பேரும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in