லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை: மனைவி ராப்ரி தேவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

லாலு பிரசாத்
லாலு பிரசாத் லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை: மனைவி ராப்ரி தேவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் முன்னாள் முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். முதல்வராக இருந்தபோது மாட்டுத்தீவன ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் அவருக்கு சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது மகள், லாலுவுக்கு சிறுநீர் தானம் செய்திருந்தார். அண்மையில் தான் சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பி லாலு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே பணிகளுக்கு பதிலாக நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டதாக லாலு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது சிபிஐ. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை ராப்ரி தேவியிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிகிச்சை தொடர்பாக டெல்லியில் லாலு பிரசாத் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் மார்ச் 1-ம் தேதி நடந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் லாலு பிரசாத்தின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in