சிபிஐயால் குறிவைக்கப்பட்ட ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர்: வீட்டில் புகுந்து அதிரடி சோதனை

சிபிஐயால் குறிவைக்கப்பட்ட ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர்: வீட்டில் புகுந்து அதிரடி சோதனை

ஜோத்பூரில் உள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட்டின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். விவசாயிகளுக்கு உரம் ஏற்றுமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

விவசாய பயிர்களுக்கு அத்தியாவசியமான மியூரேட் ஆஃப் பொட்டாஷ்க்காக மானிய விலையில் பெற்ற எம்ஓபியை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு, 2007 மற்றும் 2009-ம் ஆண்டுக்கு இடையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் செய்ததாக அக்ரசென் கெலாட் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணை 2013 -ம் ஆண்டு நிறைவடைந்தது.

விவசாயிகளுக்கு மட்டுமே விற்கப்படும் மானியத்துடன் கூடிய எம்ஓபியை போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அக்ரசென் கெலாட் விற்றார் என்றும், இதற்காக அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுள்ளார் என்றும் இந்த விசாரணை தொடர்பாக சிபிஐ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அமலாக்கத்துறை இயக்குநரகம் இந்த வழக்கு தொடர்பாக அக்ரசென் கெலாட்டிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in