காங்கிரஸ் தலைவர் நடத்தும் கல்லூரியில் சிபிஐ ரெய்டு: கர்நாடகாவில் பரபரப்பு

காங்கிரஸ் தலைவர் நடத்தும் கல்லூரியில் சிபிஐ ரெய்டு: கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நடத்தும் கல்லூரியில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது.

பெங்களூருவில் அமைந்துள்ள குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தின் தலைவராக உள்ள காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவகுமார் மற்றும் கல்லூரி அதிகாரிகளிடம் இன்று விசாரணை நடத்தியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிவகுமாரின் மகள் டி.கே.எஸ் ஐஸ்வர்யா, குளோபல் அகாடமி கல்லூரியின் அறங்காவலர் செயலாளராக உள்ளார். மேலும் சிவக்குமாரின் மனைவி கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினராக உள்ளார்.

பணமோசடி வழக்கில் காங்கிரஸின் கர்நாடக பிரிவுத் தலைவரிடம் அமலாக்கத்துறை இரண்டு மாதங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது. மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில், நவம்பர் 14 அன்று டெல்லியில் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in