ஓபிஎஸ் மகனுக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

ஓ.பி.ரவீந்திர நாத்
ஓ.பி.ரவீந்திர நாத்ஓபிஎஸ் மகனுக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

தேனியில் ஓ.பி.ரவீந்திர நாத் எம்.பிக்குச் சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்த வழக்கை தேனி வனத்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்' என இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அலெக்ஸ் பாண்டியன் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்தர நாத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேனி வனத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அலெக்ஸ் பாண்டியன், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான் செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலுக்காக தேனி மாவட்டத்திற்கு வந்தேன். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை இறந்த வழக்கில் என் மீது பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி மிரட்டி கையெழுத்து வாங்கினர்.

அலெக்ஸ் பாண்டியன்
அலெக்ஸ் பாண்டியன்ஓபிஎஸ் மகனுக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

தேனி எம்.பி ரவீந்திர நாத்தைக் காப்பாற்ற என் மீது பொய்யான வழக்கைப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை தேனி வனத்துறை விசாரிக்கும் வரை உண்மை வெளிவராது. அதனால் தான் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளேன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in