அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி: தீவிரமடையும் விசாரணை!

அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி: தீவிரமடையும் விசாரணை!

அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாவது முறையாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில்கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஏற்கெனவே கடந்த வாரம் சிபிசிஐடி ஆய்வு நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. ஆய்வாளர் லதா தலைமையில் மூன்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற்பகல் 2.50 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஆய்வாளர் லதா, பெண் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் என மூன்று காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அலுவலகத்தின் வாயில் கதவுகள் மூடப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in