
காவிரி பிரச்சினையில் திமுக அரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதால் தஞ்சையில் பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கிய நிதியை மகளிர் உரிமைத் தொகைக்கு ஒதுக்கியிருந்தால் அது சட்டப்படி குற்றம். பாதிக்கப்பட்ட வாழ்க்கையின் அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்கு ஒதுக்கிய நிதியை விதி மீறி ஒதுக்கியது தவறு.
தஞ்சையில் குறுவை நெற்பயிற்கள் கருகியுள்ளது. அதற்கு முழுக்காரணம் திமுக அரசு தான். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் படியும் ஜூன் ஜூலை மாதங்களில் கர்நாடக அணையில் இருந்து நமக்கு வழங்க வேண்டிய 16 டி.எம்.சி மற்றும் 32 டி.எம்.சி தண்ணீரை விடுவிக்காததே நெற்பயிர்கள் கருகும் சூழலுக்கு சென்றதன் காரணம். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.