ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனைகள்: தமிழக பாஜக மீது சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்

ஸ்டாலின் உறுமினால் பயந்து  பதுங்கும் பூனைகள்:  தமிழக பாஜக மீது சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்

தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக இருக்கிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிவைத்து அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவை நேரடியாகவே விமர்சனம் செய்து வருகிறார். மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்து வரும் பல்வேறு முடிவுகளை சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறார். கரோனா பரவல் கடவுளின் செயல் என்று கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பொருளாதார நிலை குறித்து பாஜக மீது தொடர்ந்து அவர் குறை கூறி வருகிறார்.ஆனால், அவர் மீது பாஜக தலைமை எந்த நடவடிக்கையோ விமர்சனனைத்தையோ முன் வைப்பதில்லை.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைமையை குறிவைத்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் ஆளும் திமுகவிற்கு நான் மட்டுமே எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழக பாஜகவில் எல்லோரும் பதுங்கும் பூனைகளாக இருக்கிறார்கள். ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக இருக்கிறது தமிழக பாஜக. மேலும், தமிக பாஜகவில் இருக்கும் சினிமா கலாச்சாரம் கட்சியை சீர்குலைத்துவிட்டது" என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிவைத்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவு, பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in