நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிப்பாகுபாடு அதிகம்! பற்றவைத்த ஆளுநரின் பேச்சு

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

"நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிப்பாகுபாடு அதிகம் இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள ஒழுகச்சேரியில் சிவா குலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளை குத்துவிளக்கு ஏற்றி ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய ஆளுநர், இந்து தர்மத்தை யாராலும் அழிக்கமுடியாது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் இந்தியாவை ஒழிக்க வேண்டும் எந்த எண்ணத்திலேயே எவ்வாறு பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலப்பது போன்ற சாதிய கொடுமைகள் தமிழகத்தில் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் தற்போது வரை தீண்டாமை நிலவுகிறது என்றும் தினமும் செய்தித்தாள்களில் இதுபோன்ற செய்திகளை பார்க்கிறேன் என்றும் ஆளுநர் கூறினார்.

மேலும் பேசுகையில், "பட்டியல் சமூக சகோதரர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. நமது இளைய தலைமுறையினர் கைகளில் சாதி அடையாளத்தை மாற்றிக் கொள்கின்றனர். எத்தனை வெட்கக்கேடானது. தண்ணீர் தொட்டியில் சிலர் மனிதக் கழிவை கலக்கின்றனர். சில மாணவர்கள் சாதிய வன்மத்தில் சக மாணவர்களை தாக்குகின்றனர். பட்டியல் சமூகப் பெண் சமைத்த உணவை பள்ளியில் சாப்பிட மறுக்கின்றனர். இதற்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in