
முன்னாள் முதலமைச்சர் என்றும் பாராமல் ஈபிஎஸ் மீது செல்போன் திருட்டு வழக்கைப் பதிவு செய்ததற்கு தமிழக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘’ தமிழகம் போதையின் தமிழகமாக மாறிவிட்டது. பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவரும் பயன்படுத்துகின்றனர். அப்படி இருக்கையில் எப்படி சட்டஒழுங்கு உள்ள மாநிலமாக தமிழகத்தைப் பார்க்க முடியும்.
முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஈபிஎஸ். எத்தனையோ வழக்குகள் இருந்தும் அவர் மீது செல்போன் திருட்டு வழக்குப் போட்டு இருப்பது தமிழக அரசு வெட்கி தலை குனிய வேண்டும். இது ஒரு அற்பத்தனமானது. ஒரு வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு கீழ்த்தரமான கேவலமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு’’ என்றார்.