இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த வழக்கானது ஜூலை 7ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. விளம்பரத்துக்காக இந்த பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்ததுடன், ஜோசப்புக்கு ரூ.25,000 அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தனர். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜோசப் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in