ஈபிஎஸ்சை சந்திக்க அனுமதி மறுத்ததால் மறியல்: ஜி.கே.வாசன் மீது 2 பிரிவில் வழக்குப்பதிவு!

ஈபிஎஸ்சை சந்திக்க அனுமதி மறுத்ததால் மறியல்: ஜி.கே.வாசன் மீது 2 பிரிவில் வழக்குப்பதிவு!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பார்க்கவிடாமல் போலீஸ் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் அவரது கட்சியினர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவரை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தடையை மீறி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 800க்கும் மேற்பட்ட அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

அப்போது அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தனது கட்சியினருடன் கைது செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வந்தார். அப்போது போலீஸார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக ஜி.கே.வாசன் மற்றும் கட்சியினர் சிலர் சாலை மறியலில் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், முனவர் பாஷா, சென்னை நந்து, வில்சன் உள்ளிட்ட பலர் மீது

சட்டவிரோதமாக கூடுதல், மாநகர காவல் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே நேற்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிச்சாமி உட்பட 1300 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in