அண்ணாமலை, எச்.ராஜா உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு!

அண்ணாமலை, எச்.ராஜா உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு!

அனுமதியின்றி பேரணி சென்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா மற்றும் 5 ஆயிரம் பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அண்மையில் மத்திய அரசு 8 ரூபாயும், டீசல் 6 ரூபாயும் குறைத்தது. இதனால் பெட்ரோல் 9.50 காசும், டீசல் 7 காசும் விலை குறைந்தது. மேலும் அனைத்து மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், சசிகலா புஷ்பா, கராத்தே தியாகராஜன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், நாராயணன், வினோத்செல்வம் உள்பட 5000 பேர் பங்கேற்றனர். இந்த போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் பாஜகவினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தடையை மீறி சட்டவிரோதமாக கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சசிகலா புஷ்பா, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் உட்பட 5000 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ிசட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in