
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கர்நாடக மாநில பாஜக எம்பியின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்தவர் பாஜக எம்.பி. ஒய்.தேவேந்திரப்பா. இவரது மகன் ரங்கநாத் மீது பெங்களூரு பசவனகுடி காவல் நிலையத்தில் 24 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் 42 வயதான ரங்கநாத் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருவதாகவும், இதன் மூலம் தனக்கு ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ரங்கநாத் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மது போதையில் பாலியல் கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரங்கநாத்திடம் கேட்டபோது தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் மறுப்பதாகவும், ரங்கநாத்தின் தந்தை தேவரப்பாவிடம் இதுகுறித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். பெண்ணின் புகாரின் பேரில் ரங்கநாத் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!
பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!
நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!