சீமான் மீது விரைவாக வழக்குப்பதிவு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரஷாந்த் கிஷோர்!

பிரஷாந்த் கிஷோர் ட்வீட்
பிரஷாந்த் கிஷோர் ட்வீட்சீமான் மீது விரைவாக வழக்குப்பதிவு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரஷாந்த் கிஷோர்!

வட மாநிலத்தவர் குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு பிரசாந்த் கிஷோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமான், “வட இந்தியர்களைப் பிடித்து அடித்து அவர்கள் மீது வழக்கு தொடருவேன். ஒரு வாரத்திற்குள் அவர்களாகவே மூட்டையைக் கட்டவைத்து விடுவேன்” என பேசினார்.

இதனை பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’’தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டுவர்களையும் விட்டுவிடக்கூடாது. ஏன், சீமான் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?" என கேள்வி எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து, வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரஷாந்த் கிஷோர் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in