லுலு மாலுலில் பறந்த பாகிஸ்தானின் பெரிய கொடி... பொய்யை பரப்பிய பாஜக பெண் தொண்டர் சிக்கினார்!

லுலு மால்
லுலு மால்

லுலு மாலில் அனைத்து நாட்டுக் கொடிகளை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக உள்ளதாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பொய்யாய் பரப்பிய கர்நாடகா பாஜக பெண் தொண்டர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொச்சி லுலு மால்
கொச்சி லுலு மால்

கர்நாடகாவைச் சேர்ந்தவர் சகுந்தலா.பாஜக தொண்டரான இவர் பெங்களூரு லுலு மாலில் மற்ற நாட்டுக் கொடிகளை விட பாகிஸ்தான் கொடி பெரிதாக வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டி அந்த பதிவை காங்கிரஸ் மூத்த தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரை டேக் செய்தார்.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதன் காரணமாக கொச்சி லுலு மாலின் மார்க்கெட்டிங் மேலாளர் அதிரா நம்பியார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பொய்யாய் பரவிய இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.

இதையடுத்து இந்த புகைப்படம் சரிபார்க்கப்பட்ட போது பொய்யாய் சித்தரித்து வெளியிடப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. கொச்சியில் உள்ள லுலு மாலை பெங்களூரு மால் என்றும், பாகிஸ்தான் கொடியை பெரியதாக சித்தரித்தும் பாஜக தொண்டர் சகுந்தலா, பொய்யாய் படத்தைப் பரப்பியது தெரிய வந்தது.

ஆனால், கொச்சி லுலு மாலில் அனைத்து நாட்டு கொடிகளும் ஒரே அளவில் இருந்தன. ஆனால், புகைப்படம் எடுக்கப்பட்ட கோணம், பாகிஸ்தான் கொடியை ஒப்பிடுகையில் பெரியதாக காட்டப்பட்டது.

இதையடுத்து சகுந்தலா மீது கர்நாடகா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த லுலு மாலின் சந்தைப்படுத்துதல் மேலாளரான அதிரா நம்பியார், அடிப்படையற்ற பொய்கள் சமூக ஊடங்களில் பரவியதால் தனது வேலையை இழந்ததாக குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் சுழலும் பொறுப்பற்ற உரையாடல் மற்றும் சரிபார்க்கப்படாத அறிக்கைகள் ஒருவரின் நேர்மை, வாழ்வாதாரத்தை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அதிராவை அந்நிறுவனம் பணியில் சேர்த்துள்ளது.சமூக ஊடகத்தில் பொய்யை பரப்பிய பாஜக பெண் தொண்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in