
பாஜகவை சேர்ந்த நடிகைகளை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கே.கே.நகரில் திமுக சார்பில் கடந்த 26-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையிலேயே அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், திமுக எம்.பி கனிமொழி உடனடியாக மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் இவர் கைது செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறிதான்.