`கை, கால்களை உடைத்துவிடுவேன்'- கொலை மிரட்டல் விடுத்த தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது பாய்ந்தது வழக்கு!

`கை, கால்களை உடைத்துவிடுவேன்'- கொலை மிரட்டல் விடுத்த தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது பாய்ந்தது வழக்கு!

தனியார் நிறுவனத்தின் புகுந்து அதன் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசாபுரத்தில் கார் உதிரிப் பாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நேற்று வந்த தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, அங்கிருந்த உரிமையாளருக்கும், ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். ``உடனே காலி செய்துவிடு. இல்லையென்றால் கை, கால்களை உடைத்துவிடுவேன்'' என்று எம்எல்ஏ பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ ராஜா மீது நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் திமுக எம்எல்ஏ ராஜா மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இதனுடைய திமுக எம்எல்ஏ ராஜா அளித்த விளக்கத்தில், நில உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் விசாரிக்க சென்றதாக கூறியுள்ளார்.

நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி
நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி

அதே நேரத்தில் நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "இந்த கம்பெனிக்கு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளோம். அந்த அட்வான்ஸ் பணத்தை தேவை இருந்தால்கூட அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையை சாதமாக பயன்படுத்திக் கொண்டு பூஜாகோயல் என்பவர் தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுத்ததோடு அத்துமீறி அராஜகம் செய்ததோடு இன்று மாலைக்குள் வெளியே செல்ல வேண்டும். இல்லையென்றால் அனைத்து பொருட்களும் தூக்கி எறியப்படும் என்று மிரட்டியுள்ளார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in