நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்?... பகீர் பேச்சுக்காக அகில இந்திய காங்கிரஸ் பெண் தலைவர் மீது வழக்கு!

 டாக்டர் ஷாமா முகமது
டாக்டர் ஷாமா முகமது

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மசூதிகள், தேவாலயங்கள் இருக்காது என்று பேசியதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது மீது கோழிக்கோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளளர்.

மக்களவை தேர்தலில் கேரளா மாநிலம், கோழிக்கோடு தொகுதியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) வேட்பாளராக எம்.கே.ராகவன் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது மதமோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண்ஜித் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஷாமா முகமது
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஷாமா முகமது

அதில், நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் மசூதிகள், கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் இருக்காது என்று டாக்டர் ஷாமா முகமது பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் ஷாமா முகமது தனது பேச்சை சமூக ஊடகங்கள்( ஃபேஸ்புக், எக்ஸ்) மூலம் வன்முறையைத் தூண்டும் வகையில் பரப்பினார் என்றும் குற்றச்சாட்டப்பட்டது.

இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது மீது ஐபிசி 153 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-ன் கீழ் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 டாக்டர் ஷாமா முகமது
டாக்டர் ஷாமா முகமது

இதுதொடர்பாக ஷாமா முகமது கூறுகையில், காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சர் அவசரம் காட்டுகிறார். மணிப்பூரில் நடந்த பிரச்சினைகளைத் தான் கூட்டத்தில் எழுப்பினேன். யூடிஎஃப் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்று பேசினேன். அத்துடன் பாஜக 400 தொகுதிகளைத் தாண்டினால் அரசியலைப்பை மாற்றி விடுவார்கள் என்று தான் சுட்டிக்காட்டிப் பேசினேன் என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in