சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தைரியம் இருக்கிறதா? - மத்திய அரசுக்கு ஓவைசி கேள்வி!

ஓவைசி
ஓவைசிசீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தைரியம் இருக்கிறதா? - மத்திய அரசுக்கு ஓவைசி கேள்வி!

ஹைதராபாத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப் போவதாக பாஜகவின் மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் கூறியதற்கு பதிலளித்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும் என்று பாஜகவை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

2020ம் ஆண்டு தேர்தல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜகவின் தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், பாரத ராஷ்டிர சமிதி மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி ஆகியோர் ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தலில் ரோஹிங்கியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வாக்காளர்களின் உதவியுடன் வெற்றி பெற முயற்சிப்பதாகக் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் ஹைதராபாத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.

செவ்வாயன்று சங்கரெட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இது குறித்துப் பேசிய ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "ஹைதராபாத் நகரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று சொல்கிறார்கள். தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்யுங்கள்" என்றார்.

ஏஐஎம்ஐஎம் தலைவருக்கும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் இடையே ரகசிய புரிந்துணர்வு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது குறித்துப் பேசிய ஓவைசி, “தெலங்கானாவில் கோயில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் என் கையில் உள்ளது என்று அமித் ஷா கூறுகிறார். ஸ்டீயரிங் என் கையில் இருந்தால், உங்களுக்கு ஏன் வலி ஏற்படுகிறது?" என்று கேள்வியெழுப்பினார்.

முன்னதாக, ஏப்ரல் 23 அன்று கர்நாடகாவின் செவெல்லாவில் பாஜக 'சங்கல்ப் சபா'வில் உரையாற்றிய அமித் ஷா, "ஓவைசி ஸ்டியரிங் உள்ள அரசால், தெலங்கானாவை இயக்க முடியாது. நாங்கள் ஓவைசிக்கு பயப்படவில்லை. ஓவைசி பிஆர்எஸ்சுக்குத்தான் கட்டாயம், பாஜகவுக்கு அல்ல. தெலங்கானா அரசு மாநில மக்களுக்காக செயல்பட வேண்டும், ஒவைசிக்காக அல்ல” என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in