சாலைத்தடுப்பின் மீது கார் மோதி பயங்கர விபத்து: பிரதமர் மோடி சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

சாலைத்தடுப்பின் மீது கார் மோதி பயங்கர விபத்து: பிரதமர் மோடி சகோதரர் மருத்துவமனையில்  அனுமதி

மைசூரில் சாலை தடுப்பில் கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி உள்பட அவரது குடும்பத்தினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் மோடியில் சகோதரர் பிரஹலாத் மோடி, அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உள்பட 6 பேர் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவிற்கு இன்று பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நஞ்சன்கூடு அருகே உள்ள கடகோலா என்ற இடத்தில் கார் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பில் பயங்கரமாக மோதியது.

பிரஹலாத் மோடி
பிரஹலாத் மோடி

இதில் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த மைசூரு தெற்கு போலீஸார், பிரஹலாத் மோடி குடும்பத்தினரை மீட்டு ஜேஎஸ்எஸ் மருத்துவமைனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in