`கேப்டன் முன்பைவிட சிறப்பாக இருக்கிறார்'- மகன் விஜய பிரபாகரன்

`கேப்டன் முன்பைவிட சிறப்பாக இருக்கிறார்'- மகன் விஜய பிரபாகரன்

கேப்டன் முன்பைவிட நன்றாக இருப்பதாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோவிலம்பாக்கத்தில் கட்சி நிர்வாகியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயபிரபாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஓராண்டு கால திமுகவின் ஆட்சியில் மின்வெட்டு அதிகம் உள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் திமுக ஆட்சி நன்றாக இருந்தாலும், வர வர கோட்டை விடுகிறார்கள். திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. அதிமுகவினர் சொல்வது போல் திமுக போட்டோ சூட் அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறது. ஒரு இடத்திற்கு போய் டீ குடிப்பது, உணவு உண்பது, தேர்தல் வாக்குறுதியை செய்யவில்லை. எல்லாம் செய்வதுபோல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அடிப்படை தேவையை மக்களுக்கு செய்தாலே நன்றாக இருக்கும்" என்று கூறினார்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய பிரபாகர், கேப்டன் நன்றாக இருக்கிறார். முன்பை விட சிறப்பாக இருப்பதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.