ஓட முடியாது… ஒளிய முடியாது: மகிந்த ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற கோர்ட் தடை!

ஓட முடியாது… ஒளிய முடியாது: மகிந்த ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற கோர்ட் தடை!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையின் இந்த நிலைக்கு ராஜபக்ச சகோதரர்கள் தான் காரணம் என அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் அவர்களுக்கு எதிரான போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 9-ம் தேதி ஏற்பட்ட மக்கள் புரட்சியால் நாட்டை விட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்குத் தப்பியோடி விட்டார். மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் பசில் ராஜபக்ச உள்ளிட்டோர் இலங்கையைவிட்டு வெளியேற தடை கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு , ஜூலை 28-ந் தேதி வரை மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சஆகியோர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்ல இன்று தடை விதித்து உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in