முதல்வர் வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது பீரங்கி வெடிகுண்டா?

முதல்வர் வீட்டின் அருகே  கண்டுபிடிக்கப்பட்டது பீரங்கி  வெடிகுண்டா?

சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது பீரங்கி வெடிகுண்டா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில், சண்டிகரில் உள்ள ராஜிந்திரா பூங்காவில் முதல்வர் பகவந்த் மான் பயன்படுத்திய ஹெலிபேடில் இருந்து 700 மீட்டர் தொலைவில் வெடிகுண்டு நேற்று கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இல்லமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த காவல்துறை கண்காணிப்பாளர் மனிஷா சவுத்ரி கூறுகையில், “ராஜிந்திரா பூங்காவிற்கு அருகிலுள்ள மாம்பழத் தோட்டத்தில் அரசு ஊழியர் ஒருவர் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பதாகப் புகார் தெரிவித்தார். சண்டிகர் உள்ளூர் போலீஸார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். வெடிகுண்டு செயலிழப்புக் குழுவை விரைவில் அனுப்புமாறு ராணுவத் தலைமையகம் சந்திமந்திருக்கு வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

இந்த நிலையில், முதல்வர் பகவந்த் மானின் பாதுகாப்புத் தலைவரும், காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநருமான ஏ.கே. பாண்டே, வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார்: “இது வெளிப்படையாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வெடிகுண்டு. இது பொதுவாக ராணுவத்திலிருந்து டீலர்களை அகற்றுவதற்கு வழி செய்கிறது ” என்று கூறினார்.

மற்றொரு காவல்துறை அதிகாரி கூறுகையில், “இது ஒரு பீரங்கி ஷெல் (வெடிகுண்டு). இதுபோன்ற பீரங்கி குண்டுகள் பஞ்சாபின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள பழைய இரும்பு பொருட்களை வாங்கும் டீலர்களிடம் கிடைக்கின்றன" என்றும் கூறினார். இந்த வெடிகுண்டு குறித்து இந்திய ராணுவத்தின் மேற்குப் படையும் விசாரித்து வருகிறது. முதல்வர் வீட்டின் அருகே எப்படி வெடிகுண்டு வந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in