விவசாயி சின்னம்
விவசாயி சின்னம்

நாம் தமிழர் கட்சி ஷாக்... 40 தொகுதிகளிலும் விவசாயி சின்னத்தில் பாரதிய பிரஜா ஐக்கியதா போட்டி!

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். 

சீமான்
சீமான்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க இன்னொரு புறம் அங்கீகாரம் இல்லாத கட்சிகள் தங்களுக்கான தேர்தல் சின்னத்தை பெறுவதில் போட்டி போட்டு வருகின்றன. இற்காக தேர்தல் ஆணையத்தை நாடும் அந்தக்  கட்சிகள், தங்கள் விரும்பும் சின்னம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தையும் நாடி வருகின்றன. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சி ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் பெறாததால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்துள்ளது.

சீமான்
சீமான்

இதனால் அதன் சின்னமாக விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சியிடம் இழந்துள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் நாம் தமிழர் கட்சியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் எதிர் வரும் மக்களவை பொதுத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் விவசாயி சின்னத்தில் போட்டியிடப் போவதாக பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை  நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்து வந்த விவசாயி சின்னம் தேர்தலில் போட்டியிட்டால், அது நாம் தமிழர் கட்சியின் சின்னம் தான் என்று நினைத்து மக்கள் அதில் வாக்களித்து விடும் அபாயம் உள்ளதால் தங்களின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் வெகுவாக குறைந்து போய்விடும் என்று அக்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in