ஈரோடு இடைத்தேர்தலில் 27,500 ரூபாய் மட்டுமே செலவு செய்தேன்: போஸ்டர் ஓட்டி தெறிக்கவிடும் வேட்பாளர்

ஆறுமுகம் ஒட்டியுள்ள நன்றி போஸ்டர்
ஆறுமுகம் ஒட்டியுள்ள நன்றி போஸ்டர்ஈரோடு இடைத்தேர்தலில் 27,500 ரூபாய் மட்டுமே செலவு செய்தேன்: போஸ்டர் ஓட்டி தெறிக்கவிடும் வேட்பாளர்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளருக்கு மொத்த செலவு ரூபாய் 27,500 மட்டும்தான்.  அதிலும் 9,500 ரூபாய் நன்கொடையாக  வந்திருக்கிறது என்று கணக்கு வெளியிட்டிருக்கிறார் அந்த வேட்பாளர்.

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் இரண்டும் இங்கு வெற்றி பெறுவதை தங்களது கௌரவ பிரச்சினையாக எடுத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கின. தொகுதிக்குள் பரிசு மழையும், பண மழையும் பொழிந்து கொண்டே இருந்தது. இரண்டு கட்சிகளும் குறைந்த பட்சமாக  தலா 300 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அங்கு போட்டியிட்ட மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் வேட்பாளர் ஆறுமுகம் தனக்கு ரூபாய் 27 ஆயிரத்து 500 செலவாகி உள்ளதாக செலவு கணக்கு வெளியிட்டு தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் தொடங்கி  வாக்குப்பதிவு நாள் வரையிலுமாக இந்தத் தொகை செலவாகி உள்ளதாகவும், இதில் எட்டு பேரிடமிருந்து 9,500 ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளது. மீதத்தொகை மட்டுமே தனது தொகை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு தூரம் பொழிந்த பரிசு மற்றும் பணமழையையும்  பொருட்படுத்தாமல்  தனது டம்பளர் சின்னத்தில் வாக்களித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் சுவரொட்டியும்  ஒட்டி உள்ளார்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in