நோய்களைத் தெரிவிக்கும்படி வேட்பாளரை வற்புறுத்த முடியாது... உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

மதுரையில் சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்
மதுரையில் சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன், மருத்துவப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

மருத்துவ ஆலோசனை
மருத்துவ ஆலோசனை

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்வதோடு, 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ”வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம். அதனால் அந்த விவரங்களை கேட்க முடியாது. இதுசம்பந்தமாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இது கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில், “தேர்ந்தெடுக்கும் பிரதிநிதியின் உடல்நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவக் காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது” எனக்கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in