எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு... சூடுபிடிக்கிறது துணை ஜனாதிபதி தேர்தல்!

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு... சூடுபிடிக்கிறது துணை ஜனாதிபதி தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டெல்லியில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்கு பிறகு மார்கரெட் ஆல்வாவை வேட்பாளராக அறிவித்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.

கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த பெண் தலைவரான மார்கரெட் ஆல்வா இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் உள்ளிட்ட பிரதமர்களின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். மேலும்

கோவா, குஜராத், ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ள மார்கரெட் ஆல்வா தற்போது எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக தென்னிந்தியாவை சேர்ந்த பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் துணை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in