நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து இயக்கம்... உதயநிதி இன்று தொடங்கி வைக்கிறார்!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி தொடங்கி 50 நாட்களில் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 50 லட்சம் பேரிடம் நீட் ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெற திமுக முடிவு செய்துள்ளது.அதனை இன்று அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி இந்த இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கவுள்ளது.

இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில், மருத்துவ அணி – மாணவர் அணி நிர்வாகிகளுடன் நாம் தொடங்கி வைக்கவுள்ளோம். நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, கழக மாவட்டங்கள்தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம்.’ என தெரிவித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in