அறப்போர் இயக்கத்தின் நிர்வாகிகள்
அறப்போர் இயக்கத்தின் நிர்வாகிகள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்க - அறப்போர் இயக்கம் தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு

`ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்க’- தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறப்போர் இயக்கம் முறையீடு

’’ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து திமுக - காங்கிரஸ் கூட்டணி தினமும் 500 ரூபாய் கொடுத்து புதிய லஞ்ச முறை உருவாக்கியுள்ளதால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

புகார் அளித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்க நிர்வாகிகள், ‘’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஒரு இடத்தில் அழைத்துக் கொண்டு வந்து அங்கு அமர வைத்து தினமும் 500 ரூபாய் பணம் கொடுத்து புதியதாக லஞ்சம் கொடுக்கக்கூடிய முறையை திமுக, காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் உருவாக்கி உள்ளது.

இதைத் தவிர பல பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கான ஆதாரங்களை இணைத்து அறப்போர் இயக்கம் இன்றைய தினம் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து ஈரோடு கிழக்கு தேர்தல் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை புகாரை வைத்துள்ளோம்.

ஒரு நியாயமான நேர்மையான தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. இதை மீறி நடந்தால் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படும், அறப்போர் இயக்கம் தன் புகாரில் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் ரத்து செய்யக்கூடிய நடவடிக்கையும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அறப்போர் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி இந்த ஆதாரங்களை பரிசீலித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தன் பரிந்துரைகளை அனுப்புவதாக கூறியிருக்கிறார்’’ என்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in