பரிசுத்தொகுப்பு ஆயிரம் ரூபாயை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பெற முடியுமா?: அமைச்சர் சொன்ன தகவல்

பரிசுத்தொகுப்பு ஆயிரம் ரூபாயை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பெற முடியுமா?: அமைச்சர் சொன்ன தகவல்

பொங்கல் பொண்டிகையை முன்னிட்டு டோக்கன் பெற்றவர்கள், அவர்களுக்கு உரிய தேதிகளுக்குள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியவில்லை என்றால், ஜன.16-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும்பணி கடந்த 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி முடிவடைந்தது.

இதையடுத்து, இன்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

இந்த நிலையில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், " டோக்கனில் குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஜன.15-ம் நாள் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, ஜன.16-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in