மோடிஜியின் ரூ.10 லட்சம் கோட்சூட் பற்றிப் பேசலாமா? - திருப்பி அடிக்கும் காங்கிரஸ்!

மோடிஜியின் ரூ.10 லட்சம் கோட்சூட் பற்றிப் பேசலாமா?  - திருப்பி அடிக்கும் காங்கிரஸ்!

ராகுல் காந்தியின் டி ஷர்ட் விலையைப் பற்றி பாஜக விமர்சனம் செய்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் கோட் பற்றி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி ஷர்ட் விலை 41 ஆயிரம் ரூபாய் என பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில் காங்கிரஸ் அந்த பதிவுக்கு பலிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ இந்திய ஒற்றுமை யாத்திரையில் திரளும் கூட்டத்தைப் பார்த்து பயமா?. பிரச்சினையைப் பற்றி பேசுங்கள்... வேலையின்மை மற்றும் பணவீக்கம் பற்றி பேசுங்கள். ஒருவேளை உடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால், மோடி ஜியின் 10 லட்சம் ரூபாய் சூட்டும், 1.5 லட்சம் கண்ணாடியையும் பற்றி பேச வேண்டும். என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என கேள்வி எழுப்பியுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றுமைப் பயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. இந்த நடைபயணத்தின்போது பாஜகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தேசத்தின் ஒற்றுமை குறித்தும் பல கருத்துகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில்தான் பாஜக, ராகுல் காந்தி மீதான விமர்சனத்தை தொடங்கியுள்ளது.

இன்று பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் பர்பெரி எடீ கோர் போலோ என்ற டி ஷர்ட்டின் படத்தை இணைத்துள்ளது. இந்த டி ஷர்ட் படத்தில் ரூ.41,257 என விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் ‘பாரதமே பார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவினை பாஜகவினர் வேகமாக பகிர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் பாஜகவின் ட்வீட்டுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் ஆடை விவகாரத்தில் பாஜக - காங்கிரஸார் இடையே காரசாரமான மோதல் வெடித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in