குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய இவங்க பேசலாமா?: அமைச்சர் பொன்முடி தடாலடி!

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய இவங்க பேசலாமா?: அமைச்சர் பொன்முடி தடாலடி!

அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் தொடங்கி குட்கா வரை எல்லாமே நடந்தது என்றும், குட்கா விவகாரத்தில் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கிய இவர்கள் பேசலாமா என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக் குறித்து அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஈபிஎஸ் காலத்தில் நடந்தவைகளை எல்லாம் நாங்கள் கூற வேண்டுமென்றால் நிறைய சொல்லலாம். 2018 - 2020 இரண்டுகளில் 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளார்கள் என்று காவல்துறை குறிப்பில் உள்ளது.

அவர் காவல்துறை குறிப்பு உள்ளிட்ட எதையும் பார்ப்பது கிடையாது. அதனால் தான் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார். அரசியல் பண்ண வேண்டுமென்ற நோக்கத்தோடு பேசி வருகிறார். கடந்த ஆட்சி காலத்தில் என்ன நடந்து என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கள்ளச்சாராயம் மட்டுமல்ல குட்கா விவகாரத்தில் கொஞ்ச நஞ்சமா பண்ணியிருக்கிறார்கள்?

குட்கா விவகாரத்தில் 40 கோடி ரூபாய் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா ஆகியோர் பெற்றுள்ளதாக மாதவராவ் என்பவர் தனது டையிரில் குறிப்பிட்டுள்ளார். குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கியவர்கள் எல்லாம் பேசலாமா? இவர்கள் ஆட்சி காலத்தில் தான் குட்கா, கள்ளச்சாராயம் விற்பனை சரளமாக நடந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 56,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கள்ளச்சாராயத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in