'என்னை சிறையில் அடைக்கலாம் ஆனால்..." - செய்தி அனுப்பிய மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா'என்னை சிறையில் அடைக்கலாம் ஆனால்..." - சிறையிலிருந்து செய்தி அனுப்பிய மணீஷ் சிசோடியா

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியா, "சிறையில் அடைப்பது எனக்கு சிரமங்களை ஏற்படுத்தலாம். ஆனால் அது எனது மன உறுதியை உடைக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

2021-22ம் ஆண்டிற்கான டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக பிப்ரவரி 26 அன்று டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்,

சிசோடியாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், "சாஹேப், சிறையில் அடைப்பதன் மூலம் நீங்கள் என்னை தொந்தரவு செய்யலாம், ஆனால் உங்களால் என் மன உறுதியை உடைக்க முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களை தொந்தரவு செய்தனர், ஆனால் அவர்களின் மன உறுதி உடைந்துவிடவில்லை -- சிறையிலிருந்து மணிஷ் சிசோடியாவின் செய்தி" என்று ஹிந்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலால் கொள்கை வழக்கில் சிசோடியாவை மார்ச் 17 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிசோடியா மற்றவர்களின் பெயர்களில் சிம் கார்டுகள் மற்றும் மொபைல் போன்களை வாங்கியதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in