கர்நாடகத்திற்குள் நடிகர் ரஜினிகாந்த் நுழைய முடியாது... வாட்டாள் நாகராஜ் மிரட்டல்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

’’கர்நாடகத்தில் தமிழ்ப்படங்களை ஓடவிடமாட்டோம்; இங்கு பிறந்த நடிகர் ரஜினிகாந்த் எங்களுக்கு ஆதரவாக இல்லை. அதனால் அவர் கர்நாடகத்திற்குள் நுழையக்கூடாது’’ என வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

வாட்டாள் நாகராஜ்
வாட்டாள் நாகராஜ்

காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மைசூரு பசவேஸ்வரா சர்க்கிளில் கர்நாடகா ராஜ்ய ரைத்தா சங்கம் மற்றும் ஹசிரு சேனா இயக்கத்தினர் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் உருவப் படத்தை கிழித்தெறிந்தனர். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், ‘’இங்கு எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள், எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பதை நான் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் எந்த தண்ணீரை குடிக்கிறார்கள்? அவர்கள் அதைக் குடிக்க வேண்டுமா, வேண்டாமா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

அவர்கள் தண்ணீரைக் குடிக்க வேண்டுமெனில் உங்கள் நிலைப்பாட்டை மாற்றுங்கள். இல்லையெனில், ரயில்கள், பஸ்கள் மற்றும் லாரிகள் மூலமாக அவர்களைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்துக்கொள்ளுங்கள். காவிரி நீரை குடிக்காமல் தமிழகம் திரும்பும்படி கூறுங்கள் பார்க்கலாம்.

இனி வரும் நாட்கள் அவ்வளவு எளிதாக இருக்காது. தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் இது. தமிழ் படங்களுக்கு தடை விதிப்போம். ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக்கூடாது. காவிரி குறித்த அவரது நிலைப்பாட்டை அறிய விரும்புகிறோம். ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் கர்நாடகாவுக்காக நிற்பிற்களா அல்லது தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in