தேர்தல் வருகிறது என்பதற்காக தேசிய அமைப்புகள் இப்படி செய்யலாமா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்தேர்தல் வருகிறது என்பதற்காக தேசிய அமைப்புகள் இப்படி செய்யலாமா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

தேர்தல் வருகிறது என்பதற்காக தேசிய அமைப்புகள் எல்லாம் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்து பூதக் கண்ணாடி வைத்து பார்த்து அதனைப் பெரிதுபடுத்தலாமா எனப் பார்க்கிறார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை லூப் சாலை மற்றும் டூமிங் குப்பத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘’சின்ன விஷயங்களுக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நடவடிக்கையின் மூலமாக தமிழகத்தின் மீதும் இந்த துறையின் மீது பாகுபாட்டுடன் நடந்துக் கொள்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தேசிய குழந்தைகள் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கூட புகார் அளித்துள்ளோம். மருத்துவமனைக்கு சென்ற அந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் மருத்துவர்கள் மீது தவறு இல்லை என தெரிவித்துவிட்டு, பின்னர் ஆளுநருக்கு சப்பைக்கட்டு கட்டுவிதமாக பேசியுள்ளனர்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, விரைவில் மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளோம். தேர்தல் வருகிறது என்பதற்காக தேசிய அமைப்புகள் எல்லாம் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்து பூதக் கண்ணாடி வைத்து பார்த்து அதனைப் பெரிதுபடுத்தலாமா எனப் பார்க்கிறார்கள்.

ஆணையங்களைப் பயன்படுத்தி மாநில அரசுக்கு எதிராக செயல்பட நினைத்தால் அது அவர்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். புதிய வைரஸின் தாக்கம் எதுவந்தாலும் அதனை எதிர்கொள்ள கட்டமைப்பு சரியாக உள்ளது'’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in