'அரசியலிலும் நடிக்கலாமா காயத்ரி ரகுராம்?'

ட்வீட் போட்டதற்கு விசிக பதிலடி
காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

``சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாத காயத்ரி ரகுராம், இப்போது அரசியலில் நடிக்கிறார்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவையில் ஜம்மு- காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பேசினார். ``ஜம்மு - காஷ்மீரை பிரித்தது மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதி’ என்று குறிப்பிட்டார்.

காயத்ரி ரகுராம் ட்விட்.
காயத்ரி ரகுராம் ட்விட்.

இதற்கு தமிழக பாஜக கலை, கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம், திருமாவளவனை விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார். அதில், ``முதலில் உங்கள் தொகுதியை பார்த்துக் கொள்ளுங்கள் திருமா. தமிழ் மக்களை கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீர் பற்றி பேசலாம். இந்தியா மற்றும் அதன் உணர்வு பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது போலிருக்கிறது. ஏதோ பேசி நீங்கள் உங்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

வன்னியரசு
வன்னியரசு

இந்த ட்வீட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசிடம் கேட்டபோது, ``இந்திய தேசிய இனங்களின் உரிமை குறித்து சட்டமேதை அம்பேத்கர் வடிவமைத்த அமைப்பு முறையை பாஜக சிதைக்க நினைக்கிறது. அதனால் தான் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்கிறது. இதுகுறித்து திருமாவளவன் பேசினால் அவர்களுக்கு கோபம் வருகிறது. இதன் காரணமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாத காயத்ரி ரகுராம், இப்போது அரசியலில் நடிக்கிறார். அதற்காக எங்கள் தலைவர் குறித்து ட்வீட் செய்துள்ளார்’ என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in