களைகட்டிய ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்... 49 தொகுதிகளில் இன்றுடன் நிறைவு!

தலைவர்கள்
தலைவர்கள்
Updated on
2 min read

ஐந்தாம் கட்டமாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (மே18) நிறைவடைகிறது. இதன் காரணமாக தொகுதிகளில் தலைவர்கள் முகாமிட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்டங்களில் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம் மற்றும் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நான்காம் கட்டம் நடைபெற்ற தேர்தல் சுமார் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 20) நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தல் 2024
மக்களவை தேர்தல் 2024

ஐந்தாம் கட்டமாக 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பிஹாரில் உள்ள 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்க்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 5 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

மே 20-ம் தேதி நடைபெறும் தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தியும், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், லக்னோவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தொகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

ராகுல் - மோடி
ராகுல் - மோடி

மூன்றாம் முறையாக மோடி தலைமையில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாஜக கூட்டணியும், அதற்கு எதிராக இந்தியா கூட்டணியும் களம் காணும் இந்த தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று பல்வேறு இடங்களில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் இன்று பேசுகின்றனர். இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in