'17ம் தேதி பேசலாம் வாங்க' அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

'17ம் தேதி பேசலாம் வாங்க' அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

இம்மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்  துவங்க உள்ள நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடத்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும்  முடங்கியது. 

இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை  செப்டம்பர் 18 முதல் 22 ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று மத்திய அரசு  அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சியில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை அரசு வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

செப்டம்பர் 17 ம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தனித்தனியே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு அவை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அவையை சுமுகமாக நடத்திட ஏதுவாக இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in