முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று  மாலை அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய மசோதா தாக்கல்செய்வது குறித்தும் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

தமிழக சட்டப் பேரவை வரும் 17-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக நடை செய்யும் மசோதாவை இயற்றுதல்,  புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்தல், பரந்தூர் விமான நிலைய நிலங்கள் கையகப்படுத்துவது உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

அத்துடன் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் இதுகுறித்து பொது வெளியில் விமர்சனத்தைத் தொடங்கியுள்ளனர். எனவே, வடகிழக்கு பருவமழை ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் கடிதங்கள் குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், அவர்களுக்கு அருகருகே இடங்கள் ஒதுக்கப்படுமா என்பது குறித்தும், பாஜகவினர் கேள்விகளுக்குப் பதிலடி கொடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in